அதிரை பாரூக் அவர்கள் கடிதம்.
ஒற்றுமை இதழில் ஆல்ஃப்ஸ் மலையின் நிழலில் என்கிற தொடரில் பேரா - ஜவாஹிருல்லாஹ் அவர்களே கூறுகிறார் கேளுங்கள் என்று அதை எழுதி விட்டு எனது கூற்று பொய் என்பதற்கு இது ஆதாரம் என்கிறார் அதிரை பாரூக். ஆனால் அது பாரூக் அவர்களின் கூற்றுக்குத்தான் பாதகமாக உள்ளது.
முன்பாக உள்ள நிலை. பின் உள்ள நிலை.
ஜவாஹிருல்லாஹ் எழுதி இருப்பது ஜெனிவா செல்வதற்கு முன்பாக உள்ள நிலை. ஐ.நா.வின் ஜெனிவா மாநாட்டில் பேசி விட்டு வந்தது முதல் ஜவாஹிருல்லாஹவுக்கு திமிர் வந்து விட்டது என்று 6 மாதங்களுக்கு முன்பே பி.ஜே. வகையறாக்கள் (துபையில்) பேச ஆரம்பித்து விட்டனர். ஜெனிவா சென்று வந்தபின் தன் தகுதியை உணர்ந்து விட்டார் ஜவாஹிருல்லாஹ் என்று நான் எழுதி இருந்தது. ஜெனிவாவுக்கு சென்று வந்த பின் உள்ள நிலை. மலிவு விலை சி.டி.யில் சுமார் 4 மாதங்களுக்கு முன் என்று பி.ஜே. தன் விளக்க உரையை துவங்குவதன் மூலம் எனது கூற்றை உண்மைப் படுத்தி உறுதி செய்துள்ளார். இதை ஆத்திரப்படாமல் படித்தால் அண்ணன் பாரூக் அவர்கள் உண்மையை உணர்வார்கள்.
இன்னொன்றையும் நினைவு படுத்துகிறேன் அபு அப்துல்லாஹ் முதல் ஜவாஹிருல்லாஹ் வரை ஒவ்வொருவரையும் முற்படுத்தியுள்ளார். முற்படுத்துவதன் நோக்கம் என்ன என்பதை 2 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். முற்படுத்திய பின் அவருக்கு ஈகோ, இம்பீயாரிட்டி காம்ளக்ஸ் சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ் எல்லாம் வரும். பொதுவாக மனிதர்களுக்கு ஏதாவது ஒன்றுதான் வரும் இவருக்கு எல்லாமே வரும். இது வரலாறு உள்ளவர்களுக்குத் தெரியும். வரலாறு இல்லாதவர்களுக்குத் தெரியாது.
வரலாறு இல்லாத அதிரை பாரூக்.
இது ஒன்று எங்கள் கண் முன்னால் இந்த வருடத்தில் நடந்த தெளிவான சான்றாகும். இதற்கு மேற் கொண்டு தாங்கள் கூறும் கடந்த பல வருட சம்பவங்களை எப்படி உண்மையென ஏற்றுக் கொள்வது. நாங்கள் தவ்ஹீது ஜமாத் காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அதிரை பாரூக் எழுதி உள்ளார். இதன் மூலம் தனக்கு வரலாறு தெரியாது என்பதையும் தான் வரலாறும் இல்லாதவர் என்பதையும் அதிரை பாரூக் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டார்.20 ஆண்டுகளுக்குட்பட்டதைத்தான் நினைவுபடுத்தி உள்ளோம்.
வகாபிகள் என்ன யாருக்கும் தெரியாத, யாரிடமும் கேட்டுத் தெரிய முடியாத, வரலாற்று ஏடுகளைப் புரட்டி பார்க்க வேண்டிய, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய, 17,18 ஆம் நூற்றாண்டுகளின் நிகழ்ச்சிகளையா சொல்லிக் காட்டி பாடம் நடத்தினோம்? ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து 20 ஆண்டுகளுக்குட்பட்டதைத்தான் நினைவுபடுத்தி உள்ளோம். இதைக் கூட தெரியாத இப்படிப்பட்ட வரலாறு இல்லாதவர்களாக அவர்கள் பின்னால் அணி வகுத்து நிற்பதால்தான் அவர்கள் துணிச்சலாக வரலாற்று புரட்டலை செய்துள்ளார்கள் என்று தெரிகிறது.
நான் ஓஸி ஏஸியில் வாழ்பவன் அல்ல.
நீங்கள் குளிர் சாதனம் பொருத்தப்பட்ட குளு குளு அறையில் செல்வம் கொழிக்கும் ஐக்கிய அமீரகத்தில் இருந்து கொண்டு என்று எழுதியதன் மூலம் அண்ணன் பாரூக் அவர்கள் தன்னைப் போல் என்னை நினைத்துள்ளார் என்று விளங்குகிறது. நான் ஓஸி ஏஸியில் வாழ்பவன் அல்ல. நெருப்பில் நின்று பணி செய்யும் உழைப்பாளி என்பதை அண்ணன் பாரூக் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் மௌலவி பிஜே அவர்களை பல இடங்களில் பேருக்கு முன்பும், பின்பும் சில நையான்டி வார்த்தைகளை உபயோகப் படுத்தி இருந்தீர்கள் . தமிழ் கூறும் முஸ்லிம்களால் கண்ணியப் படுத்த வேண்டிய மறக்க முடியாத இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மார்க்க அறிஞர் அவர் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். அவருடைய இஸ்லாமிய அழைப்புப் பணி என்பது ஈடு இனையற்றது. தமிழகத்தின் மூளை முடுக்குகளிலும் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஏகத்துவ ஒளி பிரகாசமாக வீசிக் கொண்டிருக்கிறதென்றால் அதற்காகவும் நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் அறிஞர் பிஜே அவர்கள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் அண்ணன் பாரூக்.
நான் உபயோகப்படுத்தி உள்ளது நையாண்டி வார்த்தைகள் என்றால் எது எது நையாண்டி வார்த்தைகள் என்று குறிப்பிட்டு எழுதுவதுடன், அந்த இடத்தில் இடம் பெற வேண்டிய பொருத்தமான வார்த்தைகளையும் எழுதி அனுப்ப வேண்டும். இல்லை எனில் அண்ணன் பாரூக் கூற்றுப்படி அவர் கடிதம் முழுவதும் நையாண்டித்தனமாக உள்ளது என்று ஒரே வார்த்தையில் நானும் பதில் எழுதி இருக்க முடியும்.
மார்க்க விரோதம் பி.ஜே.யின் செயலில் இருக்கிறது.
நான் பி.ஜே. அவர்களின் மார்க்கப் பேச்சை விமர்சிக்கவில்லை. பி.ஜே. அவர்களின் மார்க்க விரோத செயல்களைத்தான் விமர்சித்துள்ளேன். மார்க்க விரோதம் அவரது இஸ்லாமிய பிரச்சாரத்தில் இல்லை. மார்க்க விரோதம் பி.ஜே.யின் செயலில் இருக்கிறது. அதைத்தான் விமர்சித்திருக்கிறோம் என்பதை பரூக் புரிய வேண்டும்.குறைந்த பட்சம் ஒரு தலைவரை விர்சிக்கும் பொழுது அவருடைய குறைகளோடு அவருடைய நிறைகளையும் கொஞ்சமாவது ஒன்றிரண்டையாவது சுட்டிக் காட்ட வேண்டும் அப்படிப் பட்டவரைத்தான் நடுநிலையாளர் எனக்கூறலாம். தொடங்கியது முதல் முடியும் வரை தொடர்ந்து தூற்றிக் கொண்டிருந்தால் உங்களை நடுநிலையாளர் எனக் கூற முடியுமா ? என்று அதிரை பாரூக் கேட்டுள்ளார்.
நான் என்ன பி.ஜே.யின் வாழ்க்கை வரலாற்றையா எழுதினேன்? நிறைகளைப் பற்றியும் எழுத. ஓரு சம்பவத்தை ஒட்டிய விமர்சனத்தைத்தானே எழுதினேன். விமர்சனம் என்றாலே குறைகளை சுட்டிக் காட்டுவதுதானே. இது கூட அறிவாளி பாரூக் அவர்களுக்குத் தெரியாதா?எங்களை தவ்ஹீது வாதிகளை பிஜே வகையறாக்கள் என புனைப் பெயருடன் அழைத்ததால் உங்கள் கூற்றுக்களை ஏற்றுக்கொள்பவர்கள் அதை காப்பி எடுத்து விநியோகிப்பவர்கள் ஆயடை அனுப்புபவர்களை குராஃபிகள் என்ற புனைப் பெயருடன் அழைக்கிறோம் என்று எழுதி உள்ளார் அதிரை பாரூக்.
பி.ஜே. தவ்ஹீதுவாதி இல்லையா?
பி.ஜே. அவர்களை அதிரை பாரூக் போன்றவர்கள் நல்லவர் என்று நம்பினால், அவர்கள் கூறும் தவ்ஹீதுவாதிதான் பி.ஜே. என்று நம்பினால், பி.ஜே.யின் ஆதரவாளர்கள் பி.ஜே. அணியினர் பி.ஜே.யைச் சார்ந்தவர்கள் என்பது போன்ற பொருள்படும் பி.ஜே. வகையறாக்கள் என்று அடையாளம் காட்டினால் ஏன் வேதனைப்பட வேண்டும்? வேகப்பட வேண்டும்? வெட்கப்பட வேண்டும்? பி.ஜே. தவ்ஹீதுவாதி இல்லையா?
யார் வழியில் இருக்கிறார்கள்.
முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் கொள்கை ரீதியாக குராபி தவ்ஹீதி என்று கூறு போட்டது கிடையாது. இப்படி கூறு போடுவதன் மூலம் அதிரை பாரூக் போன்றவர்கள் நபி வழியில் இல்லை என்பது தெளிவு. யார் வழியில் இருக்கிறார்கள்? ஷநான் அபுஜஹ்லைவிட மோசமானவன்| என்று சொன்ன பி.ஜே. வழியில் இருக்கிறார்கள் என்பதும் தெளிவு.
குராபாவுக்கு சமமானவர்.
ஒருவரைப் பார்த்து ஒருவர் கெட்ட வார்த்தை சொன்னால் அதே மாதிரி கெட்ட வார்த்தையை திருப்பி சொல்வது மனித இயல்பு. குராபா என்பவன் வழி கெட்டவன். குராபிகள் என்றால் அந்த வழி கெட்ட(குராபா என்ப)வனைச் சார்ந்தவர்கள் என்று பொருள். வகாபிகள் அவர்களை பி.ஜே. வகையறா என்று சொன்னால் நம்மை குராபிகள் என்று அழைப்போம் என்கிறார். அப்படியானால் பி.ஜே.யை குராபாவுக்கு சமமானவர் என்று கருதுகிறார்கள். இதை பாரூக் அவர்கள் கூற்று சான்று பகன்றுள்ளது. அதனால்தான் பி.ஜே. தன்னை அபூஜஹ்லை விட மோசமானவன் என்றாரோ?
இதில் என்ன அவ்வளவுப் பெரிய உண்மை மறைக்கப் பட்டது ?
15.5.04க்குப் பிறகு பி.ஜேயின் உத்தமத்தனத்துக்கும் பத்தினித்தனமைக்கும் வக்காலத்து வாங்கி கடிதம் அனுப்பிய அதிரை பாரூக் அவர்களின் கேள்வியைப் பாருங்கள். முதலில் மூவர் கையெழுத்திட்டிருக்கிறார்கள் மீதமுள்ளவர்களிடம் கையெழுத்தை வாங்கித் தந்து விடுவதாக பேரா - ஜவாஹிருல்லாஹ் மௌலவி பிஜே யிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார் . அவர் வாக்குறுதி அளித்தக் காரணத்தால் அந்த நகல் அந்த வார உணர்வில் பிரசுரிக்கப் பட்டது. இது தான் உண்மை . இதில் என்ன அவ்வளவுப் பெரிய உண்மை மறைக்கப் பட்டது ? என்று தெரிய வில்லை. எதோ ஒரு பெரிய மேசடி நடந்தது போன்ற மாயையை உருவாக்கப் பார்க்கிறீர்கள். அதுவும் அதை வெளியிடத் தயாரா ? என்றும் அதையே திரும்ப திரும்ப கேட்டிருக்கிறீர்கள். ?? என்று கேட்டிருக்கிறார். அதுவும் 3.5.04 தேதிய பி.ஜேயின் கடிதத்திற்குப் பிறகும் இவ்வாறு கேட்டுள்ளார். அதிரை பாரூக் அவர்களின் நல்ல கண்ணுக்கு 3 பேர் கையெழுத்திட்டுள்ளது தெரிந்துள்ளது. பி.ஜே. திருந்தி மனம் வருந்தி தவ்பா செய்து உண்மையை ஒப்புக் கொள்ள எண்ணினாலும் பி.ஜே. வகையறாக்கள் விடமாட்டார்கள் போலும். உண்மைக்குப் புறம்பாக எல்லாரும் கையெழுத்திட்டுள்ள மாதிரி பொய்யாக உணர்வு பத்திரிக்கையில் முக்கிய அறிவிப்பு வெளியிபட்டது மட்டுமா கேள்வி?
மக்களிடம் போட்டுக் காட்டி ஆதரவு திரட்டப்பட்ட போன் பேச்சு.
உண்மைக்குப் புறம்பாக உணர்வில் பிரசுரிக்கப் பட்டப் பிறகும் பல ஊர்களிலிருந்து மட்டுமல்ல பல நாடுகளிலிருந்தும் போன் போட்டுக் கேட்டவர்களிடமெல்லாம்,
ஆம் அப்படித்தான் எல்லாரும் கையெழுதிட்டு தந்துள்ளார்கள் என்றும் நன்கு யோசித்துதான் 2 நாட்களுக்குப் பிறகுதான் கையெழுத்திட்டு தந்தார்கள் என்றும் உறுதியாகக் கூறி உள்ளார். பி.ஜே.யின் இந்த போன் பேச்சை ரிக்கார்டிங் செய்த பி.ஜே. வகையறாகள் கூட்டத்தைக் கூட்டி மக்களிடம் போட்டுக் காட்டி ஆதரவு திரட்டினார்கள்.
48 மணி நேர கால அவகாசம்
பி.ஜேயின் கூற்றுப்படி பெருந்திரளாக?
நூறு பேர் கூடிய ஆலந்தூர் கூட்டத்திலும் 48 மனி நேரம் கழித்து எல்லாரும் கையெழுத்திட்டுதந்துள்ளார்கள் என்று உறுதியாகக் கூறினார். பிறகு திருச்சியில் கூட்டிய கூட்டத்திலும் ஒழுக்கமுள்ள தலைவர் ஸைபுல்லாஹாஜா எல்லாரும் கையெழுத்திட்ட மாதிரி உணர்வை படித்துக் காட்டினார். அதற்குப் பிறகு பேசிய பி.ஜே.யும் "ஒப்பந்தத்தில் எல்லாரும் கையெழுத்திட்டுத் தந்துள்ளார்கள்" என்று ஒன்றுக்கு பலமுறை கூறுகிறார்.அத்துடன் நிற்கவில்லை பி.ஜேயின் பொய்யான கூற்றை உண்மைபடுத்திட,
அவரது கூற்றுக்கு மேலும் வலு சேர்க்க ஷஷநான் கவனமாக எழுதி சனிக்கிழமை மஃரிபில் கொடுத்தேன். எல்லாரும் கையெழுத்திட்டு திங்கள் கிழமை மஃரிபில்தான் தந்தார்கள். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள்ஷஷ என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்.
பி.ஜே. ஆதரவாளர்களுக்கு இது ஒரு சவாலாக ஆனது.
இத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னர் எல்லாரும் கையெழுத்திட்ட ஒரிஜினலை வெளியிடட்டும் என்று நடுநிலையான நியாயவான்களின் குரல் பலமாக ஒலித்தது. பி.ஜே. ஆதரவாளர்களுக்கு இது ஒரு சவாலாக ஆனது. அண்ணன் எல்லாரும் கையெழுத்திட்ட ஒரிஜினலை வெளியிட்டு சவாலாகப் பேசுபவர்களின் வாயை அடைக்கப் போகிறார்.
1.எல்லாரும் கையெழுத்திட்டுள்ள பேப்பரைக் காட்டுகிறேன்.
2.அந்த பேப்பரை செட்டப் என்று கூறினால் எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள் என்று முபாஹலா பண்ணத் தயார்.
3.அவர்கள் கையெழுத்து போடவில்லை என்று முபாஹலா பண்ணத் தயாரா?
என்று சவால் விடுவார் என்றுதான் ஆவலுடன் எதிர் பார்த்தனர். என்ன செய்தார் அண்ணன்பி.ஜே?
நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட பின்தான் வெளியிட வேண்டும் என்று ஜவாஹிருல்hஹ்வோ அவருடன் உள்ள மற்ற 7 நிர்வாகிகளோ என்னிடம் கூறவில்லை.
நாங்கள் அனைவரும் கையெழுத்திடாமல் இதை வெளியிட வேண்டாம் என 8 பேரில் எவரும் என்னிடம் கேட்கவில்லை. இதை மறுத்து முபாஹலா செய்யத் தயாரா? இவ்வாறுதானே சவால் விட்டு அவரது ஆதரவாளர்கள் முகத்தில் பி.ஜே. கரியை பூசினார்.
பொய்யா? போர்ஜரியா? பிதற்றலா? பிராடா?
கேள்வி என்ன? எல்லாரும் கையெழுத்திட்டுள்ளார்களா? இல்லையா? இதுதானே கேள்வி. வாதத்திற்காக கையெழுத்திடுவோம் என்று சொல்லி இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள் என்று சொன்னது, ஒன்றுக்கு 10 தடவை அல்ல 20 தடவை அல்ல அதற்கும் கூடுதலாக சொன்னது, பல இடங்களில் சொன்னது, பல நேரங்களில் சொன்னது, பல போன்களில் சொன்னது. இவை யாவும் பொய்யா? போர்ஜரியா? பிதற்றலா? பிராடா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எது பிதற்றல்? பிதற்றல்காரர்கள் யார்? என்பதையும் பி.ஜே.வகையறாக்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பி.ஜேயின் வாதம் எப்படி உள்ளது?
பி.ஜேயின் மேற்கண்ட வாதம் எப்படி உள்ளது? துப்பாக்கியுடன் வந்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்கார அயோக்கியன், ஷநான் கொள்ளையடிக்கும்போது அந்த வீட்டில் உள்ள யாரும் என்னை தடுக்கவில்லை. கொள்ளை அடிக்கக் கூடாது என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை| எனவே எந்வித எதிர்ப்புகளும் இன்றி நான் எடுத்து வந்த பொருள்களை கொள்ளை என்று கூறக் கூடாது| என்கிற மாதிரி உள்ளது.
பகிரங்க விவாதம்.
திறந்த வெளி மேடைக்கு பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறீர்களே நீங்கள் யார் ? என்று எத்தனைப் பேருக்குத் தெரியும் ? உங்களைப் போன்று ஆயிரம் ப.இ க்கள் மற்றும் முகவரி இல்லாதவர்கள் நாள்தோறும் பகிரங்க விவாதத்துக்கு அழைத்துக் கொண்டிருப்பார்கள் என்று வரலாறு இல்லாத அதிரை பாரூக் எழுதி உள்ளார்.
அகம்பாவம் பிடித்தவன் போல்.
ஒரே மேடைக்கு வரத் தயாரா? என்று பி.ஜேயைப் பார்த்து நான் சவால் விடவில்லை. பி.ஜே. சமீபத்தில் வெளியான சி.டி.க்களிலும் ''பழ்லுல் இலாஹி, ஹாமித்பக்ரி விஷயங்களிலும் வகாபிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்'' என்கிறார் இதை ஆத்திரத்தில் பாரூக் கவனிக்கவில்லை போலும். பி.ஜே.க்கு நான் கடிதம் எழுதினேன். அவர் எனக்கு பதில் எழுதவில்லை. எனக்கு பதில் எழுதாமல் பழ்லுல் இலாஹி குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்று 2 வீடியோக்களை துபைக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவில் சவால் விட்டிருந்தார். அப்பொழுதும் அகம்பாவம் பிடித்தவன் போல் ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என்று நான் எழுதவில்லை. அவர் விட்ட சவால் அ.த.ஜ.கூட்டமைப்பு சார்பிலான வீடியோவாக இருந்ததது. அதனால் அப்பொழுது கூட்டமைப்பு தலைவராக இருந்த ஹாமித் பக்ரிக்கு பதில் எழுதினேன்.கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் விடுத்துள்ள சவாலின்படி ஒரே மேடைக்கு வந்தால் பி.ஜே.யின் கூற்றுக்கள் பொய் என்பதை எப்படியெல்லாம் நிரூபிக்க முடியும் என்பதற்கு ஓரிரு சான்றுகளையும், பி.ஜேயின் பொய் சத்தியத்தையும் லுஹா, எம்.எஸ்.சுலைமான் ஆகியவர்களின் பொய் சத்தியம், பொய் சாட்சியம் ஆகியவற்றையும் சுட்டிக் காட்டி எழுதி அனுப்பினேன். முன்னதாக த.மு.மு.க சார்பில் வந்த கடிதத்திற்குரிய பதிலை ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு அனுப்பினேன்.
அந்த விமர்சனங்களுக்கு உரியவர் பி.ஜே.
நான் விமர்சித்து கடிதம் எழுதியது ஜவாஹிருல்லாஹ் ஹாமித்பக்ரி ஆகியவர்களின் பெயருக்கு. அந்த கடிதங்கள் அவர்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அதில் உள்ள விமர்சனங்கள் அவர்களை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும் அந்த விமர்சனங்களுக்கு உரியவர் பி.ஜே. என்று விளங்கி இருந்தார்கள். எனவே அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அந்தக் கடிதங்களுக்கு பொறுப்பு ஏற்று பி.ஜே. சவால் விட்டு பிரசுரம் வெளியிட்டார். நான் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உள்ள விமர்சனங்களுக்கு பி.ஜே. டென்ஷனாகி நோட்டீஸ் வெளியிட்டார். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பெயராலோ ஹைதர் அலி அவர்களின் பெயராலோ ஹாமித் பக்ரி பெயராலோ யார் பெயரால் விமர்சித்து குற்றம்சாட்டி எழுதி இருந்தாலும் அவற்றுக்குச் சொந்தக்காரர் பி.ஜே.தான் என்பதை அன்றைய பிரசுரங்களே சாட்சியாக உள்ளன என்று இந்தக் கடிதத்தின் முதல் பக்கத்தில் எழுதி உள்ளேன் அதற்கு இந்த நிகழ்ச்சி மிக முக்கியமான ஆதாரமாகும்முதலில் வீடியோ மூலம் சவால் விட்டவர் பிறகு பிரசுரம் மூலம் சவால் விட்டார்.
எனது குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான சாட்சியை விலைக்கு வாங்கும் வரை அமைதியாக இருந்தார். பிறகு பெருந்தொகை வசூல் மோசடி என்று பழி போட்டு ஒரே மேடைக்கு அழைத்தார். எனவே ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என்று அவரது சவாலை ஏற்றேன். பி.ஜே சாட்சிகளை சரி கட்டிய பின் சவால் விட்டிருப்பதாலும்,
பி.ஜே. வகையறாக்கள் பொய் சத்தியம், பொய் சாட்சியம் செய்யக் கூடியவர்கள் என்பதை நிரூபித்திருப்பதாலும் முபாஹலாவும் பண்ண வேண்டும் என்ற நிபந்தனையுடன் பி.ஜேயின் ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமான சவாலை ஏற்றேன்.
பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார்.
பி.ஜே. விட்ட சவாலில் இருந்து அவர்தான் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார். ஷhர்ஜாவில் உள்ள பி.ஜே. வகையறாக்கள், நான் சவாலை ஏற்று இருந்தும் அறைகூவலை சந்திக்கத் திரானி இல்லாத பழ்லுல் இலாஹி என்று பிரசுரம் வெளியிட்டனர். தெரியாமல் எழுதி இருப்பார்கள் என்ற நல் எண்ணம் வைத்து பி.ஜே.யின் சவாலை ஏற்று நான் எழுதிய கடிதத்தை அனுப்பி வைத்தேன். அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
பிடரி மயிரை பிடித்து இழுத்து வாருங்கள்.
எனவே அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். அந்தப் பிரசுரத்தை கம்யூட்டர் டைப் செய்தவரையும் வினியோகித்தவர்களையும் பார்த்துக் கேட்கிறேன். உங்களுக்கு தெம்பு இருந்தால் திரானி இருந்தால்; மானம் - ரோஷம் - சூடு - சுரணை இருந்தால் நீங்கள் அணிந்துள்ள கீழாடை மானத்திற்காகத்தான் என்பது உண்மையானால் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள அறைகூவலை ஏற்று பி.ஜே.க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உள்ளபடி சவாலை சந்திக்க உங்கள் பி.ஜேயின் பிடரி மயிரை பிடித்து இழுத்து வாருங்கள். இந்த வார்த்தை உங்களுக்கு மட்டுமல்ல முன் பின் என்ன நடந்தது என்று தெரியாமலேயே, என்னைப் பற்றி சமூக விரோதக் கும்பல் வெளியிட்ட அவதூறுப் பிரசுரங்களை அச்சிட்டு, காப்பி எடுத்து வினியோகித்தவர்கள் அமைப்பாக இருந்தாலும் தனி நபராக இருந்தாலும் அத்தனை பேருக்கும் இது பொருந்தும். என்று பதில் கொடுத்தேன். அந்த பதிலையே இப்பொழுது உங்களுக்கும் தருகிறேன்.
1. பி.ஜே. அந்நஜாத்தில் இருந்து விலகியது ஏன்?
2. பி.ஜே. ஜாக்கில் இருந்து விலகியது ஏன்?
3. பி.ஜே. த.மு,மு,க.வில் சேர்ந்தது ஏன்?
4. கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னாரா?
5. பழ்லுல் இலாஹி பெருந்தொகை வாங்கினாரா?
6. பி.ஜே. மாதிரி பழ்லுல் இலாஹி வசூல் மோசடி செய்தாரா?
7. ஷம்சுல்லுஹா,
தென்காசி சுலைமான் பொய் சத்தியம் செய்துள்ளார்களா?
8. பணத்திற்காக ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவன் பி.ஜே. வகையறாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டானா?
இல்லையா? இவ்வாறாக அனைத்தையும் பேசுவோம்.
பி.ஜே. அவர்களே நடுவராக இருக்கட்டும்.
'கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடுக்காதே' என்பார்கள் நான் எழுத்தைக் கொடுத்துள்ளேன். 1.12.2002 கடிதத்தில் உள்ளபடி ஒரே மேடையில் சந்திக்கத் தயார். நடுவராக அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுக் கொடுத்து முன்பு எழுதினேன். இப்பொழுது இன்னும் விட்டுக் கொடுக்கிறேன். எனக்கும் லுஹாவுக்கும் பாக்கருக்கும் சுலைமான் மற்றுமுள்ளவர்களுக்கும் உள்ள முபாஹலாவில் பி.ஜே. அவர்களே நடுவராக இருக்கட்டும்.. எனக்கும் பி.ஜேக்கும் உள்ள முபாஹலாவில் லுஹா, பாக்கர், சுலைமான் போன்ற பி.ஜே. அணியினரே நடுவராக இருக்கட்டும். முன்பெல்லாம் ஒரு நிலைப்பாட்டில் இருந்ததாக கூறி ஓடி ஒழிந்தார். இப்பொழுது அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி முபாஹலாவுக்கு அழைப்பு விடுத்து விட்டார். எனவே பி.ஜேயை பிடித்து இழுத்து வாருங்கள். உங்களை நோக்கி எழுதி உள்ளேன் என்ற கண்ணோட்டத்துடன் முந்தைய பாராவுக்கு முந்தையதை மீண்டும் படியுங்கள்.
ஆதரித்த நிலையில் மரணிப்பவர்கள் கதி என்ன?
கண்மூடித்தனமாக பி.ஜே. பிறர் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நம்பி கடந்த காலங்களில் உண்மைப்படுத்தி நின்றவர்கள் இன்று அவர் பக்கம் இல்லை. மறுமையில் அல்லாஹ் கேட்டால் யா அல்லாஹ், அவர் சொன்ன மார்க்க விஷயங்களுக்கு ஆதாரங்களைத் தந்தார். மார்க்கத்தை ஆதாரத்துடன் கூறிய அவர் மனிதர்கள் மீது கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என்று நம்பினோம். அப்பொழுது அவரது சுயரூபத்தை யாரும் எங்களுக்கு அடையாளம் காட்டவில்லை என்று கூறி அதற்குப் பின் நடந்தவைகளையும் கூறி மன்னிப்பை பெற்று விடுவார்கள். இன்று பி.ஜே.யின் சுய ரூபம் தெளிவாக அடையாளம் காட்டப்பட்ட பின்பும் அவரே தன்னை அபுஜஹ்லைவிட மோசமாக இருப்பேன் என்று பிரகடனப்படுத்திய பின்பும் அவரையும் அவரது மார்க்க விரோத செயல்பாடுகளையும் ஆதரித்த நிலையில் மரணிப்பவர்கள் கதி என்ன? இறை அச்சம் உடையவர்கள் சிந்திப்பார்கள்.
"ஜம்இய்யத்து பேரில் உள்ள கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்து பாதுகாப்பாக வைத்து உள்ளேன். நான் சொந்தமாக கொடுக்கும் கடனை எழுதி வைப்பேன் வைக்காமலும் இருப்பேன். வரவு செலவு விபரங்கள் செயலாளர் பொருளாளர்களுக்குத் தெரியும். நான் செத்துப் போனால் ஜம்இய்யத்துக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்று சொல்கிறார்களோ அதை கொடுத்து விட்டுத்தான், என் சொத்தை வித்து கொடுத்து விட்டுதான், மற்றது செய்யனும் என என் மனைவி கிட்ட (வஸிய்யத்) சொல்லி இருக்கிறேன் என்று நான் சொன்னதை வார்த்தை ஜாலங்களால் திசை திருப்பி வெளியிட்ட வீடீயோவை வரலாறு இல்லாத இந்தப் பாவிகள்தான் அரபு நாடுகளுக்கு வரவழைத்து வினியோகித்து என்னை கேவலப்படுத்தினார்கள் யாஅல்லாஹ்" என்று மறுமையில் கமாலுத்தீன் மதனி போன்ற பாதிக்கப்பட்டவர்கள் முறையிடும்போது பி.ஜே. வந்து அவரது வாதத் திறமையால் காப்பாற்றி விட முடியுமா?
உதாரணத்தின் மூலம் உண்மையை உணர்த்திய பி.ஜே.
திருச்சி கூட்டத்தில் நடந்தவைகளையும் நடப்புகளையும் பற்றி பேசிய பி.ஜே. அவற்றில் உண்மைக்குப் புறம்பானவற்றைகளைத்தான் கூறினார். ஆனால் அவர் கூறிய உதாரணத்தின் மூலம் ஒரு உண்மையை உணர்த்தி உள்ளார். அதை உணர பெரிய அறிவு ஒன்றும் தேவை இல்லை. இருந்தாலும் பெரிய அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டுள்ள யாரும் உணர்ந்துள்ள மாதிரி தெரியவில்லை.நான் கட்டிய கட்டிடம்தான். அது இடிந்து விழப் போகிறது என்றால் நான் கட்டிய கட்டிடம் ஆயிற்றே என்று கட்டிடத்தைப் பற்றி கவலைப்பட வேண்டுமா? அதிலிருந்து நானும் வெளியேறி அதில் உள்ள மக்களையும் வெளியேற்றி; உயிரைக் காப்பாற்ற வேண்டுமா? என்று கேட்டு அவர் உருவாக்கிய ஒவ்வொரு அமைப்புகளிலிருந்தும் வெளியேறியதற்கு உதாரணம் கூறி அனைவரும் அவர் பின்னால் வரவேண்டும் என்கிறார். இன்ஜினியரைத்தான் முதலில் கட்டி வைத்து உதைப்பார்கள்.
ஒரு இன்ஜினியர் கட்டிய கட்டிடம் இடியப் போகிறது என்றால், சேரியிலிருந்து வந்து குடியேறி இருந்த படிப்பறிவு இல்லாத மக்களாக இருந்தாலும் அதைக் கட்டிய இன்ஜினியரைத்தான் முதலில் கட்டி வைத்து உதைப்பார்களே தவிர, யாரும் அந்த இன்ஜினியர் பின்னால் போக மாட்டார்கள். கட்டி வைத்து உதைப்பவர்கள் காலில் செருப்பு கிடந்தால் செருப்பாலும் அடிப்பார்கள். தப்பித் தவறி விளக்குமாறோ துடைப்பமோ கிடைத்தால் அதைக் கொண்டும் அடிப்பார்கள். பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் அடிப்பவர்கள் அடிப்பார்கள். அடிகளோடு விட்டு விடுவார்களா?
ஊழல் பெருச்சாளியே என்னடா கலப்படம் பன்னிநாய். திருட்டு நாயே எதைத் திருடிநாய் என்று பாதிக்கப்பட்ட நிலையில் பேசுபவர்கள் பேசுவார்கள்.
கீழ்ப்பாக்கம் கேஸைவிட மோசமானவர்கள்.
ஒரு கட்டிடம் இடியப் போகிறது என்றாலே ஏற்படும் விளைவுதான் இது. அந்த இன்ஜினியர் கட்டிய கட்டிடமெல்லாம் இடியப் போகிறது, இடியப் போகிறது என்றால் அதன் விளைவு என்ன ஆகும். அந்த இன்ஜினியர் ஊரில் தலைகாட்ட முடியுமா? அந்த இன்ஜினியர் வந்து அதுவும் நான் கட்டியதுதான் இடியப் போகிறது. எனவே புதிதாக நான் கட்டவிருக்கும் கட்டிடத்திற்கு வாருங்கள் என்றால் கீழ்ப்பாக்கம் கேஸைவிட மோசமானவர்கள் கூட அந்த இன்ஜினியர் பின்னால் போக மாட்டார்கள். இதுதான் அவர் கூறிய உதாரணத்தின் அடிப்படையிலான விளக்கமாகும்.
உதாரணத்தின் மூலம் பி.ஜே. உணர்த்தி உள்ள உண்மை.
20 வருட காலமாக ஒவ்வொரு அமைப்பை உருவாக்குவதும்,
பிறகு அது சரி இல்லை என்பதுமான இந்த நிலையில் இருந்து, கோளாறு எங்கு உள்ளது என்றால் புத்தி இல்லாப் பொறியாளர் இடம்தான் கேளாறு உள்ளது என்பதையும், இதை விளங்காத கீழ்ப்பாக்கம் கேஸை விட கீழையான மூலை இல்லா முலஜாக்கள்தான் அவர் பின்னால் அணி வகுத்து உள்ளார்கள் என்பதையும் இந்த உதாரணத்தின் மூலம் பி.ஜே. உணர்த்தி உள்ள உண்மையாகும். வஸ்ஸலாம்.
இப்படிக்கு:
கா.அ.முஹம்மது பல்லுல் இலாஹி
0 comments:
Post a Comment