Tuesday, January 26, 2016

பின்னிணைப்பு 18

அமீருக்குக் கட்டுப்படுதலின் அளவுகோல்!
 நாங்கள் ஐந்து மற்றும் நான்கு பேர்களாக இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) எங்களிடம் வந்தார்கள். இந்த இரு எண்ணிக்கையில் ஒரு கூட்டம் அரபியர்களாவர். மற்றவர்கள் அந்நியர்களாவர். அப்போது நபி(ஸல்) அவர்கள் செவிசாயுங்கள், எனக்குப் பின்னால் அமீர்கள் தோன்றுவார்கள். யார் அவர்களிடம் சென்று அவர்கள் சொல்லும் பொய்யை உண்மையாக்கி, அவர்கள் செய்யும் அநியாயத்திற்குத் துணைபோகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அவர் தடாகத்தே வரமாட்டார். யார் அந்த அமீரிடம் செல்லாது அவர்களது அநியாயத்திற்குத் துணை போகாது அவர்கள் சொல்லும் பொய்யை உண்மைப்படுத்தாது இருக்கின்றார்களோ அவர் என்னைச் சார்ந்தவர். நான் அவரைச் சார்ந்தவன். அவர் தடாகத்தை வந்தடைவார் என்ற செய்தியை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கூறினார்கள். அறிவிப்பவர் : காஃப்பின் அஜ்ரா, திர்மிதி.
அமீருக்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி, கண்மூடித்தனமாகப் பின்பற்றும் செயலை மார்க்கம் கண்டிக்கிறது. அமீர் செய்யும் அநியாயங்களுக்குத் துணை போகக் கூடியவர் நரகம் செல்வார் எனவும் எச்சரிக்கை செய்கின்றது. அல்மூபீன் மார்ச். 99 பக். 46, 47
உணர்வு பெறுவாரா?
முதலில் தவ்ஹீத் மவ்லவி(?) இந்த அரிய உபதேசங்களை தனக்கும் தன்னை நம்பிக் கண்மூடிச் செயல்படும் தனது ஆதரவு இளைஞர், இளைஞிகளுக்கு உபதேசம் செய்தால் மிகவும் நன்மை பயக்கும். முதலில் அன்னிசா 4:112 இறை எச்சரிக்கையைப் படித்து அவர் உணர்வு பெற்றால் அது மிகவும் நல்லது.
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதிமீது வீசிவிடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறான். (4:112)
1987க்குப் பிறகு தவ்ஹீத் மவ்லவி(?)யின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவர்கள், முன்னர் அவருக்கு மிக உற்ற நண்பர்களாக இருந்துவிட்டு, பின்னர் அவராலேயே பாதிப்புக்கு உள்ளானவர்கள் நன்கு அறிந்த உண்மை. பல குற்றச் செயல்களுக்கு அவரே முழுமுதல் காரணமாக இருந்துவிட்டு, பின்னர் அதை மற்றவர்கள்மீது சுமத்திய பல சம்பவங்களை அவர்களே அறிவார்கள். அவர்களே நேரில் அவற்றில் சம்பந்தப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் தங்களின் தவறுக்கு மன்னிப்புக் கெட்டிருக்கிறார்கள்.
1988களில் அந்நஜாத்தில், இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை; முஸ்லிம்கள் அனைவதும் அல்லாஹ்வி னதும், அவனது தூதரினதும் கட்டளைப்படி, நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற ஒரே இஸ்லாமிய பேரியக்கத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி எழுதினோம். அதற்கு மறுப்பாக பல மூடத்தனமான வாதங்களை தவ்ஹீத் மவ்லவி(?) எடுத்து வைத்தார். அதில் ஒன்று வருமாறு:
அன்று சொன்னது! இன்று சொல்வது!
வகாபிகள் ஒரு கூட்டமைப்பாக அமீரை ஏற்படுத்தி குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் இயங்கி வருக ிறோம். இது முஸ்லிம்களின் கூட்டமைப்பு அல்ல எனக் கூறப்போகின்றீர்களா? (அல்ஜன்னத்-ஏப்ரல் 93)
அதாவது கமாலுத்தீன் மதனியை அமீராகக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட ஜாக் பற்றி இவ்வாறு சான்றளித்துள்ளார். அன்று 93-ல் வரிந்து கட்டிக்கொண்டு ஜாக்கை இப்படி தூக்கி நிறுத்தியவர், 99-ல் அதே கமாலுத்தீன் மதனி மற்றும் ஜாக் பற்றி என்ன கூறுகிறார் பார்த்தீர்களா? அதேபோல் 2002-ல் தமுமுக தலைவர்களைப் பற்றி ஆகா, ஓகோ என்று உணர்வில் எழுதியவர், 2005-ல் அவர்களைப் பற்றி என்னென்ன அவதூறுகளைப் பரப்புகின்றார் பார்த்தீர்களா?.இல்லாததை இட்டுக்கட்டி அவதூறுகளைப் பரப்புவதில் தவ்ஹீத் மவ்லவி(?)யை மிஞ்ச இன்று உலகில் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். இதை யாரும் மறுப்பார்களானால், எம்மிடம் வரட்டும். அவர் எழுதிய கடிதங்கள், பேசிய ஆடியோ கேஸட்டுகள் மூலம் எமது கூற்றை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.அவர் கூறுவது தவறாக, பாவமாக இருந்தாலும் அதை அப்படியே ஒப்புக் கொள்கிறவர்களை ஆகா, ஓகோ என புகழ்வார். அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டி கண்டிக்க ஆரம்பித்தால் வந்தது வினை. அவர்களை எந்த அளவு இழிவுபடுத்த வேண்டுமோ, கேவலப்படுத்த வேண்டுமா அவை அனைத்தையும் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு, அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமின்றி துணிந்து செயல்படுத்துவார். அல்லாஹ்மீது ஆணையிட்டே அவதூறுகளைப் பரப்புவார். காசுக்காக அவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பலர் இந்த உண்மையை அறிவார்கள்.
இந்த நல்ல மனிதர்தான்(?) மேற்படி இதழின் 46, 47 பக்கங்களில் அரிய உபதேசங்களை ஊருக்கு உபதேசமாக எடுத்து எழுதியுள்ளார். தன்னை மறந்து ஊருக்கு உபதேசம் செய்வது புரோகிதர்களின் வாடிக்கைதானே!
தவ்ஹீத் மவ்லவி(?) ஆய்வுப்படி முஸ்லிம்கள் ஒன்றுபடவே முடியாது!
இன்று நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களில் யாருக்குமே ஆட்சி அதிகாரம் இல்லை என்பதை தவ்ஹீத் மவ்லவி(?) மறுக்கமாட்டார். எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருவரை தலைவராக அமீராக ஏற்று அவரின் கீழ் ஒன்றுபட்டு ஓரணியில் செயல்பட வேண்டிய கட்டாயமில்லை. ஆளாளுக்கு அவரவர்கள் மனோ விருப்பப்படி இயக்கங்களையும், அமைப்புகளையும் புற்றீசல்போல் வளர்த்துக் கொண்டு, பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு சீரழிந்த வாழ்க்கை வாழலாம் என்பதுதான் தவ்ஹீத் மவ்லவியின் இந்த 56 பக்க ஆய்வின் நோக்கம். இந்தியாவில் மட்டுமல்ல. எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆட்சி அதிகாரம் இல்லையோ, அங்கெல்லாம் முஸ்லிம்கள் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய கட்டாயமில்லையே; அல்லாஹ் அப்படி ஏவவில்லை. ஆட்சி அதிகாரம் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே அவரது தலைமையில் ஒன்றுபட்டிருக்க வேண்டும். பிரியக்கூடாது. அப்போதுதான் அது பெரிய குற்றம்; தலை சீவப்படும் குற்றம் என்பது தான் தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஆய்வின் முடிவு ஆட்சி அதிகாரமில்லாத முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் அமீர் இல்லாக கட்டுப்பாடற்ற மிருகங்கள் போல் வாழலாம் என்பதுதான் அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு.
எண்ணற்ற நபிமார்கள் ஆட்சி அதிகாரமில்லாமல்தான் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் ஆரம்ப 13 வருட கால மக்கா பிரசார பணி ஆட்சி அதிகாரம் இல்லா நிலையில்தான் நடந்துவந்தது. நபி(ஸல்) மக்காவிலும், ஆட்சி அதிகாரமில்லா நபிமார்களும் தங்களை நபியாக ஏற்றுக் கொண்ட மக்களிடம் அதிகாரம் செலுத்த முடியாமல்தான் பிரசாரபணி செய்கு வந்ததாக இந்த தவ்ஹீத் மவ்லவி(?) கூறுகிறாரா? அவர்கள் அந்த நபிமார்களின் சமூகங்களை பிளவுபடுத்தாமல் ஒன்றுபட்டிருக்கவில்லை என்று இவர் சொல்கிறாரா? என்னே அறிவீனமானதொரு ஆய்வை செய்து தன்னை நம்பியுள்ள அப்பாவி இளைஞர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்.
முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக்கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும்போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகின்றன. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுறக் கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிப் போகிறான்.ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வேர்டு அமீருக்குக் கட்டுப்படுதலை வகாபிகள் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும் தெளிவு பிறக்கும். இன்ஷா அல்லாஹ். அல்முபீன் மார்ச் 99. பக்.7
இந்தப் பீடிகையோடு ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஆய்வு, இறுதியில் முஸ்லிம் களிடையே எஞ்சி இருக்கும் ஒற்றுமையையும் குலைக்கும் விதமாக ஆட்சி அதிகாரமுள்ளவர் மட்டுமே அமீர்; அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஜமாஅத்தை பிளவுபடுத்தாமல், வேறு போட்டி ஜமாஅத் அமைக்காமல் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரமில்லாதவர்கள் அமீர்கள் அல்ல. அவர்கள் வெறுந் தலைவர்கள் மட்டுமே; அப்படிப்பட்டவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்ல வில்லை. அந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறலாம். புதிது புதிதாக ஜமாஅத்துகள் அமைக்கலாம். அது மார்க்கத்தில் குற்றமில்லை. முஸ்லிம் சமுதாயத்தை எத்தனைப் பிளவுகளாக, பிரிவுகளாக ஆக்கினாலும் அது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று தவ்ஹீத் மவ்லவி(?) கூறிக்கொண்டு, கடந்த 20 வருடங்களில் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று நான்கு மத்ஹபு பிளவுகளிலிருந்து வெளியேறியவர்களை ஏழு இயக்கப் பிரிவுகளில் ஆக்கி அவர்களைப் பலவீனப்படுத்தியுள்ளார். இதுவே எதார்த்தமான உண்மை; தவ்ஹீத் மவ்லவி(?)யின் சாதனை.
மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதே புரோகிதர் பணி!
இரவும் பகலைப் போல் வெள்ளை வெளேர் என்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தில், சுமால் பத்து லட்சம் கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும் ஹதீஸ்கள் என்று புகுத்திவிட்டு, மார்க்கத்தைக் கலப்படமாக்கி சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கி, அந்த சிக்கல்களை அவிழ்த்துவிட்டு, மார்க்கத்தை எளிதாக்கித் தரும் பேர்வழிகள் என திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளும் புரோகித இனத்தைச் சேர்ந்தவர்தானே இந்த தவ்ஹீத் மவ்லவி(?)யும். அந்த புரோகிதப் புத்தி இவரை விட்டுப் போகுமா? சுத்தமான கலப்படமே இல்லாத புரோகிதன் நான் என்பதை நிலைநாட்டி இருக்கிறார்.தவ்ஹீத் மவ்லவி(?) செய்துள்ள ஹிமாலயத் தவறை இப்போது புரிய வைக்கிறோம். கவனமாகப் படியுங்கள்.
தவ்ஹீத் மவ்லவி(?)யின் ஹிமாலயத் தவறு!
அல்குர்ஆனில் அமீரைப் பற்றிய 4:59 இறைவாக்கு, நபி(ஸல்) அவர்களின் அமீரைப் பற்றி அனைத்து ஹதீஸ்கள், ஜமாஅத் பற்றிய ஹதீஸ்கள் இவை அனைத்தும், அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒரே முஸ்லிம் ஜமாஅத்தாகிய ஜமாஅத் அல் முஸ்லிமீன்பற்றி மட்டுமே! நபி(ஸல்) அவர்களது 40வது வயதிலிருந்து 63 வயது வரை அந்த ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத் (21:92, 23:52) தவிர வேறு எந்த ஜமாஅத்தும் இருக்கவில்லை என்பதை இந்தப் புரோகித வர்க்கத்திலுள்ள எந்த மவ்லவியும் மறுக்க முடியாது.
ஒரே மகனைப் பெற்றுள்ள தந்தை ஒருவர், தனது மகனுக்குப் பெயரிட்டிருந்தாலும், பெரும்பாலும் எப்படி எனது மகன் என்று மட்டுமே கூறுவாரோ, ஒரு மாப்பிள்ளைக்கு மட்டுமே திருமணம் நடக்கும் வீட்டில், எப்படி மாப்பிள்ளையின் பெயரைக் குறிப்பிடாமல் பெரும்பாலும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று மட்டுமே கூறப்படுமோ, அதே போல் ஒரே ஜமாஅத், “ஜமாஅத் அல் முஸ்லிமீன்என்று மட்டுமே இருந்ததால் பெரும்பாலும் ஜமாஅத், ஜமாஅத் என்று மட்டுமே ஹதீஸ்களில் காணப்படுகிறது.
நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் இல்லாது. அவர்களது மறைவுக்குப் பின்னர் இந்தப் புரோகிதர்கள் தோற்றுவித்த எந்த ஜமாஅத்தினதும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும்.என்றோ, அவர் ஜமாஅத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றோ நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தப்படும் அனைத்துப் பிளவுகளை விட்டும் விலகி விடுங்கள் (தில்க்கல் ஃபிர்க்கா), அந்தப் பிரிவினர் உங்களைத் துன்பப்படுத்தி உங்களது உணவு தேவைகளைத் தடுத்தாலும், நீங்கள் மரவேர்களை சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் அந்தப் பிரிவு ஜமாஅத்துகளில் ஒருபோதும் இருந்துவிடாதீர்கள்என நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை தான் முன் அறிவிப்பாகக் காணப்படுகிறது.
இஸ்லாம் முஸ்லிம் அல்லாத பிரிவுகள் வழிகேடே!
படைத்த எஜமானன் அல்லாஹ்வின் 3:103, 105, 6:153,159, 30:32, 42:13, 14  மிகக் கடுமையான எச்சரிக்கைகள் படியும், நபி(ஸல்) அவர்களின் இந்த மிகக் கடுமையான எச்சரிக்கைப்படியும், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்ட ஷீஆ, சுன்னத்வல் ஜமாஅத், 4 மத்ஹபு பிரிவுகள், தரீக்கா பிரிவுகள், ஸலஃபி, இஹ்வானுல் முஸ்லிமீன், அஹ்ல  ஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, ஜிஹாத், கிலாஃபத், அஹ்ல குர்ஆன், பாகிஸ்தானிலும் தமிழ்பேசும் பகுதியிலும் இருக்கும் ஜமாஅதி அல் முஸ்லிமீன்”  (இவர்கள் நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி தங்களை ஜமாஅத் அல் முஸ்லிமீன்என்று சொல்லிக் கொண்டாலும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு முரணாக, 21:92, 23:52 அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக முஸ்லிம் உம்மத்தைப் பிளவு படுத்துகிறார்கள்) ஆக இவைபோல் அனைத்து பிளவுகளும், பிரிவுகளும் தில்க்கல்ஃபிர்க்கர்-அனைத்துப் பிரிவுகளையும் விட்டு நீங்கிவிடு என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நிராகரிக்கப்பட வேண்டிய வழிகேட்டுப் பிரிவுகளே.
அல்மாயிதா 5:3லுள்ள இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள்மீரு என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்என்று அல்லாஹ் மிகத் தெளிவாக அறிவித்துவிட்டான். இதற்கு மேலும் மார்க்கத்தில் எதையும் நுழைக்க முடியும் என்பவன் வடிகட்டின மூடனாகவும், வழிகெடுபவனாகவும், வழிகெடுப்பவனாகவும் மட்டுமே இருக்க முடியும். 33:36 இறைவாக்கும் இதையே உறுதிப்படுத்துகிறது.
இந்த புரோகித மவ்லவிகள் தங்களின் சூன்ய, வசீகர பேச்சைக் கொண்டு முஸ்லிம்களை மயக்கி வழிகெடுப்பவர்கள் என்பதை மிகத் துள்ளியமாக அறிந்துள்ள, எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் ஆல இம்ரான் 3:19-ல் கூறுவதைப் பாருங்கள்.நிச்சயமாக இஸ்லாம்(மட்டும்) தான் அல்லாஹ்விடத்தில் மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படும்(3:19) என்று வலியுறுத்திச் சொல்கிறான் அல்லாஹ்.அப்படியும் இந்தப் புரோகிதர்கள் முஸ்லிம்களை பல வழிகேட்டுப் பிரிவுகளில் ஆக்கி விடுவார்கள் என்பதையும் அறிந்துள்ள அல்லாஹ், அந்தப் பிரிவுகள் ஏற்றுக் கொள்ளப்படாது; அவர்கள் நஷ்டவாளிகளே என்று 3:85-ல் எச்சரிக்கிறான்.
இன்னும், இஸ்லாம் அல்லாத (வேறு பிரிவுப் பெயர்களிலுள்ள) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அப்பிரிவுகள்) ஒருபோதும் அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் (அப்பிரிவுகளிலுள்ள) அவர்கள் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்கள்.அல்லாஹ் நமக்குக் கொடுத்தது இஸ்லாம் மார்க்கம். அந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் முஸ்லிம்கள். அதை உறுதிப்படுத்தி அல்லாஹ்வே நமக்கு முஸ்லிம்கள் என்று பெயரும் சூட்டிவிட்டான். (22:78) நம்மீது கடமையான பிரசார பணியைச் செய்வதால் நமக்கு பிரத்தியேகமாக தனிப்பெயர் சூட்டக் கூடாது. முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே சொல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.(41:33)
உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசும் புரோகிதர்கள்!
இரவும் பகலைப் போன்ற இவ்வளவு தெள்ளத் தெளிவான இறைவனது கட்டளைகள் இருந்தும், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித வர்க்கம், எப்படியும் தங்களின் சூன்ய, வசீகர பேச்சால் மயக்கி, அல்லாஹ் அத்தவ்பா 9:8-ல் சொல்லிக் காட்டுவது போல், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசி, இஸ்லாம், முஸ்லிம் என்று வாயால் சொல்லிக் கொண்டே அவர்களுக்கு இவ்வுலகில் ஆதாயத்தைப் பெற்றுத்தரும், அவர்களே கற்பனை செய்யும் வழிகேட்டுப் பிரிவுப் பெயர்களில் முஸ்லிம்களை இழுத்துச் சென்று விடுகிறார்கள்.எனவே அப்படிப்பட்ட பிரிவு ஜமாஅத்களில் அசந்து, மறந்து சென்றிருந்தாலும், உடனடியாக அந்த பிரிவுகள் அனைத்தை விட்டும் நீங்கி விடுங்கள் என்று நபி(ஸல்) மிகக் கடுமையாகக் கட்டளையிட்டுள்ளார்கள்.
இப்புரோகித மவ்லவிகள் தங்களின் சூன்ய, வசீகர பேச்சால் மயக்குவார்கள். அது பலன் தராவிட்டால் மிரட்டுவார்கள். தங்களின் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு பெரும் துன்பம் தருவார்கள். நியாயமான உங்களின் தேவைகள், உணவுத் தேவைகள் முதல் கொண்டு, உங்களுக்குக் கிடைக்காமல் தடுப்பார்கள். அவற்றிற்காக அவர்கள் அழைக்கும் வழிகேட்டு பிரிவுகளில் சென்று விடாதீர்கள். மரவேர்களைச் சாப்பிட்டு காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே! என்று நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருந்தால், இஸ்லாம், முஸ்லிம் அல்லாத பிளவு, பிரிவுப் பெயர்கள், குறிப்பாக ஜாக், ததஜ போன்ற முஸ்லிம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் இயக்கங்கள் எந்த அளவு வழிகேட்டு இயக்கங்கள் என்பதை இனவெறிக்கு ஆளாகாதவர்கள் நிச்சயமாக உணர முடியும்.
கேவலம் 10 ஆயிரம், 15 ஆயிரம் சம்பளம்-கூலி கிடைக்கிறதே, அதைவிட்டு வெளியேறினால், நமது பிழைப்புக்கு வேறு வழி என்ன? என்ற சிந்தனையில் தவ்ஹீத் மவ்லவி(?)யின் பித்தலாட்டங்களுக்கும், தில்லுமுல்லுகளுக்கும் துணை போகிறவர்கள்நாளை மறுமையில் தங்களின் நிலை என்னவாகும் என்று மேற்படி நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையை முன்னிருத்திச் சிந்திக்கவும்.
ஜமாஅத்தைப் பிளவு படுத்திய தனது குற்றத்தை மறைக்க, தவ்ஹீத் மவ்லவி(?), ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீர்களாக இருக்க முடியும் என்று நிலைநாட்ட அவர் செய்த, இந்த அறிவீனமான ஆய்வை விட, அல்லாஹ்வின் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டு, மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள அனைத்துப் பிரிவுகளை விட்டும் விலகி விடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். அதனால் நான் ஜாக்கை விட்டும் வெளியேறுகிறேன் என்று கூறி இருந்தால், அது மிக அழகான, அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய முடிவாக இருந்திருக்கும். ஆனால் ஜாக் பிரிவைக் கைக்கழுவி விட்டு, புதியதொரு பிரிவை கற்பனை செய்ய திட்டம் வகுத்ததால், அவ்வாறு அறிவிக்க அவரால் முடியாமல் போய்விட்டது.
களியக்காவிளையில் திணரல் ஏன்?

இதே போல்தான் களியக்காவிளை விவாதத்திலும் சமாதி வழிபாடு, மெளலூது, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் போன்ற குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரண்பட்ட ஷிர்க்கான செயல்களை மறுத்துக் கூற 7:3, 18:102-106, 33:36, 66, 67, 68 போன்ற அல்குர்ஆன் நேரடிக் கட்டளைகளை, எடுத்து வைக்காமல், மெளலூது பாக்களிலுள்ள குறைகளை எடுத்து வைப்பதன் மூலம் மூக்கறுபட்டார். காரணம் இந்த குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தால். அவரது புதிய கற்பனையான ததஜவுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டு விடும்; அதனால் தான் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் கொடுக்காமல், தனது சொந்த கற்பனைகளை எடுத்து வைத்து மண்ணைக் கவ்வினார்.(நன்றி:அந்நஜாத்)

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More